தினமணி 22.10.2013
விதிமீறல்: கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ. “சீல்’
சென்னை வேளச்சேரி பகுதியில் விதிமுறை மீறி
கட்டப்பட்டு வந்த வணிக கட்டடத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும
(சி.எம்.டி.ஏ) அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனர்.
இது குறித்து சி.எம்.டி.ஏ. வெளியிட்ட செய்தி: வேளச்சேரி லட்சுமிபுரம்
திரெüபதி அம்மன் கோயில் தெருவில் தரைதளம் மற்றும் முதல் தளம் கட்ட சென்னை
மாநகராட்சியிடம் அனுமதி பெற்று குடியிருப்புக்கான கட்டடம் கட்டப்பட்டது.
ஆனால் விதிமுறைக்கு மாறாக அதன் உரிமையாளர் 2-ஆவது தளமும், 3-ஆவது
தளத்தில் ஒரு பகுதியும் கட்டி, வணிக பயன்பாட்டுக்காக பயன்படுத்தி வந்தார்.
இது குறித்து கடந்த மார்ச் மாதம் பணியை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆனால் 3-ஆவது தளத்தில் தொடர்ந்து கட்டுமான பணிகள் நடைபெற்று
வந்ததையடுத்து, அதன் உரிமையாளர் வசித்து வந்த பகுதியை தவிர்த்து
கட்டடத்துக்கு திங்கள்கிழமை சீல் வைத்து மூடப்பட்டது என்று அந்த செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.