தினமணி 12.02.2014
விதிமீறல் மருத்துவமனை கட்டடத்துக்கு “சீல்’
தினமணி 12.02.2014
விதிமீறல் மருத்துவமனை கட்டடத்துக்கு “சீல்’
விதியை மீறி கட்டடப்பட்ட தனியார் மருத்துவமனை கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இது குறித்து சி.எம்.டி.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொரட்டூர்,
திருமலை நகர் அவென்யூ, எண், 9 என்ற முகவரியில் தரைத்தளத்துடன் கூடிய 5
தளங்கள் கொண்ட மருத்துவமனை கட்டடம், விதிமுறைகளுக்கு மாறாக முறைகேடாக
கட்டப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து அக் கட்டடத்தின் உரிமையாளருக்கு கடந்த ஆண்டு நவம்பரில்
நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பிறகும் கட்டடம் சரிசெய்யப்படாததால்,
குறிப்பிட்ட தனியார் மருத்துவமனை கட்டடத்தின் 4 மற்றும் 5- ஆம் தளங்களை
சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் செவ்வாய்கிழமை பூட்டி சீல் வைத்தனர் என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.