தினமலர் 21.05.2010
குறிஞ்சிப்பாடியில் மிளகாய்த்தூளில் கலப்படம் செய்த மில்லுக்கு “சீல்‘
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடியில் தரம் குறைந்த பொருட் களை பயன்படுத்தி மிள காய் தூளில் கலப்படம் செய்த மில்லை துணை இயக்குனர் சீல் வைத்தார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பாட்டை வீதியில் அருள் என்பவர் மாவு மில் நடத்தி வருகிறார். இவர் மாவு மில்லில் மிளகாய்த் தூள் அரைத்து கடைகள், சந்தைகளில் விற்பனை செய்து வந்தார். அந்த மிளகாய் தூளில் அதிக அளவு கலப்படம் செய்தும், தரம் குறைவான பொருட்களை பயன்படுத்தி மிளகாய் தூள் அரைத்து விற்பதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீராவுக்கு புகார் வந்தது. புகாரின் பேரில் துணை இயக்குனர் மீரா தலைமையில் வடலூர் வட்டார மருத்துவ அலுவலர் லட் சுமி சீனுவாசன், துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ஜனகராஜன், வட் டார சுகாதார மேற் பார் வையாளர் சுப்ரமணியன், உணவு ஆய்வாளர் தயாநிதி, சுகாதார ஆய் வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் அடங்கிய குழு மாவு மில்லை ஆய்வு செய்தனர். ஆய்வில் தரம் குறைவான மிளகாய் வற்றல், மல்லி ஆகியவை பயன்படுத்தி மிளகாய் தூள் அரைத்தும், தூளின் எடையை அதிகப்படுத்த ரேஷன் அரிசியை அரைத்து மிளகாய் தூளில் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மிள காய் தூள் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு கோயம்புத்தூருக்கு அனுப் பப்பட்டது. கலப்பட மிளகாய் தூள் அரைத்த மாவு மில்லை துணை இயக்குனர் மீரா, குறிஞ் சிப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் சேவியர் ஆகியோர் சீல் வைத்தனர்.
மாவு மில்லில் இருப்பு வைக்கப்பட்டிருந்த கலப்பட மிளகாய் தூள் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.