தினமணி 26.07.2012
“தில்லைநகரில் ரூ. 25 லட்சத்தில் பூங்கா’
திருச்சி, ஜூலை 25: திருச்சி தில்லைநகர் கிழக்குப் பகுதியில் ரூ. 25 லட்சத்தில் நடைபாதை வசதியுடன்கூடிய பூங்கா அமைக்கும் பணிகளை மாநகர மேயர் அ. ஜெயா, ஆணையர் வே.ப. தண்டபாணி ஆகியோர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
இந்த பூங்காவில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு வசதிகள், நீர் ஊற்று உள்ளிட்டவை அமையவுள்ளன.
தில்லைநகர் முதல் குறுக்குத் தெரு மேற்குப் பகுதியில் ரூ. 6 லட்சத்தில் அமைக்கப்பட்ட தார்ச்சாலையையும் இவர்கள் பார்வையிட்டனர்.
அரியமங்கலம் கோட்டம் வைர விழா வளாகத்தில் வாகன நிறுத்துமிட வசதியுடன் வணிக வளாகம் கட்டும் பணி, திருச்சி காந்தி சந்தையை மேம்படுத்துவது குறித்தும் பார்வையிட்டனர்.
துப்புரவுக் கருவிகள்: புதிதாக மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 5 வார்டுகளுக்காக ரூ. 2 லட்சத்தில் வாங்கப்பட்டுள்ள துப்புரவுக் கருவிகள் மற்றும் தளவாடப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ள மரக்கடை பகுதி கிடங்கு வளாகத்தையும் பார்வையிட்டனர்.