தினமலர் 03.06.2010
தரமற்ற மசாலா பொடி தயாரிப்பு ரைஸ் மில்லுக்கு “சீல்‘ வைப்பு
தேனி: தரமற்ற மசாலாபொடி தயாரித்த ரைஸ்மில்லுக்கு நகராட்சி அதிகாரிகள் “சீல்‘ வைத்தனர்.
தேனி நகரில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் ஓட்டல்கள், காலாவதியான உணவு பொருட் களை விற்பனை செய்யும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மீது நகராட்சி அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று சுகாதாரமற்ற முறையிலும், தரமற்றதாகவும் மசாலா பொடி தயாரிக்கும் ரைஸ்மில்கள், மசலாப்பொடி தயாரிப்பு இடங்களில் நகராட்சி கமிஷனர் மோனி தலைமையில், சுகாதார அலுவலர் தயாளன் மற்றும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிவராம் நகரில் மசாலாப்பொடி அரைக்கும் பார்வதி ரைஸ்மில்லில் சோதனை செய்தனர். அங்கு மசாலாப்பொடி அரைக்கும் மல்லி, வத்தலுடன், கம்பு, அரிசியை வைத்திருந்தனர். அரைத்து வைத்திருந்த மசாலாப்பொடி தரமற்றதாக இருந்தது. பணியாளர் கள் விபரத்தை தெரிவிக்க மறுத்தனர். மேலும் பணியாளர்கள் “மாஸ்க்‘ அணிந்து பணிபுரியவில் லை. இது குறித்து விளக்கம் கூறாததால் பார்வதி ரைஸ் மில்லுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.