தினமலர் 22.06.2010
நகராட்சியில் “தமிழ் வாழ்க‘
உடுமலை : உடுமலை நகராட்சியில் “தமிழ்வாழ்க‘ நியான் விளக்கு போர்டு அமைக்கப்பட்டுள்ளது.உலக தமிழ் செம்மொழி மாநாட்டினையொட்டி, மாநகராட்சிகள், நகராட்சிகள் உட்பட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு அலுவலகங்களில் “தமிழ் வாழ்க‘ என இரவிலும் ஒளிரும் வகையில் நியான் விளக்கு அமைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் உடுமலை நகராட்சி அலுவலகமான தாகூர் மாளிகையில் நேற்று “தமிழ்வாழ்க‘ நியான் விளக்கு பலகை பொருத்தப்பட்டது.