தினமணி 27.08.2009
சிந்தாதிரிப்பேட்டையில் நாளை மறுநாள் “மக்களைத் தேடி‘
சென்னை, ஆக. 26: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மக்களின் குறை தீர்க்கும் “மக்களைத் தேடி‘ நிகழ்ச்சி, சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெறுகிறது.
சென்னை மாநகராட்சியின் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மேயர் மா. சுப்பிரமணியன் கலந்து கொள்கிறார். சிந்தாதிரிப்பேட்டை, 53, மேற்கு கூவம் ஆறு சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியில், காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.
அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்து அளிக்கும் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணப்படும்.
இதில், மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்கின்றனர். 79 முதல் 84 வரையிலான வார்டுகளில் உள்ள பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம்.