தினமணி 30.12.2013
“அம்மா உணவகங்களில் 4 கோடி இட்லி விற்பனை
அம்மா உணவகங்களில் 1 ரூபாய்க்கு ஒரு இட்லி என விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை சுமார் 4 கோடி இட்லி விற்பனையாகியுள்ளது என்று அதிமுக பேச்சாளர் கோபி.காளிதாஸ் கூறினார்.
ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில், அவர் மேற்கண்டவாறு பேசினார்.
கூட்டத்துக்கு கட்சியின் தொகுதிச் செயலர் என்.முனுசாமி தலைமை தாங்கினார்.
கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் சி.ஏழுமலை, எம்எல்ஏ அ.முகமது ஜான், மேயர் பா.கார்த்தியாயினி, நகர்மன்றத் தலைவர்கள் வேதகிரி (வாலாஜா), சித்ரா சந்தோஷம் (ராணிப்பேட்டை), பி.அப்துல் ரஹ்மான் (மேல்விஷாரம்), கட்சியின் ஒன்றியச் செயலர் எம்.சி பூங்காவனம், நகரச் செயலர்கள் மோகன் (வாலாஜா), ஜே.பி.சேகர் (ராணிப்பேட்டை), ஜெயலலிதா பேரவையின் மாவட்டச் செயலர் வி.முரளி, இணைச் செயலர் கே.பி.சந்தோஷம், நகர்மன்ற உறுப்பினர்கள் கீதா சேகர், மணிமேகலை, முன்னாள் உறுப்பினர் தியாகராஜன், எம்ஜிஆர் மன்றத்தின் நகரத் தலைவர் என்.சற்குணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.