தினமணி 23.07.2010
மாநகராட்சி சார்பில் ராயபுரத்தில் நாளை “மக்களை தேடி‘ நிகழ்ச்சி
சென்னை, ஜூலை 22: சென்னை மாநகராட்சி சார்பில் “மக்களை தேடி‘ நிகழ்ச்சி, ராயபுரத்தில் ஜூலை 24-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சி மரகதம் மாளிகை, பி.ஏ.என்.ராஜரத்தினம் சாலை (ஜி.ஏ. சாலை), பழைய வண்ணாரப்பேட்டையில் ஜூலை 24-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி அலுவலர்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அலுவலர்கள், குடிசை மாற்று வாரிய அலுவலர்கள், பொது விநியோகத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை துறை அலுவலர்கள் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பதிவு செய்து தீர்வு காண உள்ளனர். எனவே, 15-வது வார்டு முதல் 22 வார்டு வரை உள்ள பொதுமக்கள் “மக்களை தேடி‘ நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.