தினமணி 05.08.2010
விதிமீறல்: பஸ் நிலையத்தில் டீக்கடைக்கு “சீல்‘ வைப்புமதுரை
, ஆக.4: மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில், மாநகராட்சி விதிகளை மீறி எளிதில் தீப்பற்றக்கூடிய மண்ணெண்ணெய் அடுப்பு பயன்படுத்திய டீக்கடைக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டதாக, மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.இது குறித்து
, அவர் கூறியிருப்பதாவது: மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இரு உணவகங்களுக்கு மட்டுமே எரிவாயு அடுப்பு வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இந்த விதிகளுக்கு முரணாக செயல்பட்டு வந்த ஒரு டீக்கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு
, புதன்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், நடைபாதைகளில் அளவுக்கு அதிகமாக வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு பொருள்கள் அகற்றப்பட்டு, மாநகராட்சி பண்டகசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது என்று ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வில், உதவி ஆணையர் (வருவாய்) எம். ஆசைத்தம்பி மற்றும் உதவி ஆணையர் (வடக்கு) எஸ்.பி. ராஜகாந்தி, சந்தைக் கண்காணிப்பாளர் பழனிவேலு, சுகாதார ஆய்வாளர்கள், கட்டட ஆய்வாளர்கள் மற்றும் நகரமைப்புப் பிரிவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.