தினமலர் 06.08.2010
தோல் மண்டிக்கு “சீல்‘
திண்டிவனம் : திண்டிவனத்தில் உள்ள தோல் மண்டிக்கு நகராட்சி சுகாதார அதிகாரிகள் சீல் வைத்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கசாமியான் தெருவில் தனியாருக்கு சொந்தமான தோல் மண்டி உள்ளது. இதனால் அப்பகுதியில் பொது சுகாதாரக்கேடு ஏற்படுவதால், அவர்களே அகற்றிக்கொள்ள வேண்டியது என்று நகராட்சி சுகாதாரத் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனாலும் தோல் மண்டி அகற்றப்பட வில்லை. இதனையடுத்து நகராட்சி கமிஷனர் முருகேசன் உத்தரவின் பேரில் நேற்று காலை 10 மணிக்கு சுகாதார அலுவலர் பாலச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜரத்தினம், சரவணன் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் சென்று, தோல் மண்டியை பூட்டி “சீல்‘ வைத்தனர்.