தினமணி 20.09.2010
மக்களுக்கு பயன்படாத “மக்கள் சாசனம்‘ தகவல் பலகை
காஞ்சிபுரம், செப். 19: காஞ்சிபுரம் நகராட்சியின் “மக்கள் சாசனம்‘ என்னும் தகவல் பலகை மக்கள் பார்வையில் படாதவாறு சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது.
÷காஞ்சிபுரம் நகராட்சி சார்பில் மக்கள் சாசனம் என்னும் தகவல் பலகை உருவாக்கப்பட்டுள்ளது. இப் பலகையில் மக்கள் எந்தெந்த குறைகளுக்கு யாரை அணுக வேண்டும். யாரிடம் மனு கொடுக்க வேண்டும். இந்த மனுவுக்கு எவ்வளவு நாளுக்குள் பதில் அளிக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் இந்த தகவல் பலகையில் உள்ளது.
÷இவைகள் தவிர எந்தெந்த சான்றிதழ்கள் நகராட்சியால் வழங்கப்படும், அதற்கான கட்டணம் எவ்வளவு எத்தனை நாளுக்குள் இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற விவரங்களும் இந்த தகவல் பலகையில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கும்.
÷மக்களுக்கு பயனுள்ள இந்த தகவல் பலகை பார்வையாக வைக்காமல், நகராட்சி கட்டடத்தின் வாயில் அருகே சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. இதனை பொது மக்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் பலர் வலியுறுத்துகின்றனர்.
÷இதுகுறித்து முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ராமநாதன் கூறுகையில், அலுவலர்கள் தவறு செய்தால், தகவல் பலகையில் உள்ள விவரத்தை வைத்து கேள்வி கேட்க வசதியாக இருக்கும். ஆனால் யாருக்கும் பயன்தராத வகையில் வைக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் பார்வையிலும் படும்படி வைக்க நகர் மன்ற நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.