தினமணி 10.12.2010
“
வேளச்சேரி ஏரியில் 7 கோடியில் படகு குழாம்‘வேளச்சேரி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் மேயர் மா
.சுப்பிரமணியன்.சென்னை, டிச.9: வேளச்சேரி ஏரியில் 7 கோடியில் சுற்றுலா பயணிகளுக்கான படகு குழாம் அமைக்கப்பட உள்ளது என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை வேளச்சேரி ஏரியை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது
:வேளச்சேரி ஏரியை அழகுபடுத்துவதற்காக ஆலோசகர் நியமிக்கப்பட்டு வரைவுகள் பெறப்பட்டன
. மொத்தம் 55 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 49 ஏக்கர் பரப்பை அழகுபடுத்தி, தூய்மைப்படுத்தி, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக படகு குழாம் அமைக்கப்பட உள்ளது. ஆலோசகர் வழங்கியுள்ள வரைவுகளின்படி, திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, பணிகள் தொடங்கப்படும் என்றார்.