தினமணி 26.11.2010
“
தேங்கிய மழைநீரை அகற்ற தீவிர நடவடிக்கை‘மதுரை
, நவ. 25: மதுரை நகரில் தேங்கியுள்ள நீரை டீசல் என்ஜின்கள் மூலம் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக, மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் தெரிவித்தார்.பருவமழை காரணமாக
, மதுரை நகரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, மாநகராட்சி அலுவலர்களுடன் ஆணையர் எஸ். செபாஸ்டின் வியாழக்கிழமை காலை அவசர ஆலோசனை நடத்தினார்.இக்கூட்டத்தில் ஆணையர் தெரிவித்த தகவல்கள்
:மழைநீர் அதிகம் தேங்கியுள்ள இடங்களில் டீசல் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
. போடி லைன், செல்லூர் கேடிகே தங்கமணி நகர் 1-வது தெரு, துரைச்சாமி நகர் போன்ற பகுதிகளில் இப்பணி தீவிரமாக நடைபெறுகிறது.இப்பணியில் தனியார் ஜேசிபி வாகனங்கள்
, பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் லாரிகள் என 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 4 மண்டலங்களுக்கும் இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.போடி
–லைன், பூக்காரத் தெரு ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கியிருப்பதால், அப்பகுதி மக்கள் குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான 3 வேளை உணவு, உடைகள் தனியார் உதவியுடன் வழங்கப்பட்டு வருகிறது.கிருதுமால் வாய்க்கால்
, அவனியாபுரம், பந்தல்குடி, சாத்தையார் ஓடை, திருமலைராயர் படித்துறை உள்ளிட்ட 9 வாய்க்கால்களில் அடைப்பு எடுக்கப்பட்டு, மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மழை நீர் மூலம் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்க
, குடிநீரில் குளோரின் கலந்து விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் இணைப்பு இல்லாத இடங்களில் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.வைகை ஆற்றின் கரையோரம் வரும் குப்பைகள் அகற்றப்பட்டு
, வெள்ளக்கல் மையத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன எனத் தெரிவித்தார்.மழை நீர் வடிகால் பகுதிகளில் அடைப்பு காரணமாக தேக்கம் ஏற்பட்டு இருந்தால்
, உடனடியாக அடைப்பை அகற்றுமாறும், தண்ணீர் அதிகமாகத் தேங்கியிருந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட வார்டு உதவிப் பொறியாளர்கள், ஆணையர்கள் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான உணவுப் பொட்டலங்கள் தயார் நிலையில் வைத்திருக்குமாறும், அவர் அறிவுறுத்தினார்.