தினமணி 26.11.2010
பாளையங்கோட்டையில் வாடகை செலுத்தாத கடைக்கு
“சீல்‘திருநெல்வேலி
,நவ.25: பாளையங்கோட்டை மகாராஜநகரில் வாடகை செலுத்தாத கடைக்கு மாநகராட்சி பணியாளர்கள் வியாழக்கிழமை “சீல்‘ வைத்தனர்.பாளையங்கோட்டை மண்டலப் பகுதியில் வரி
,வாடகை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்த கடை உரிமையாளர்களுக்கு,அதை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. இதில் பெரும்பாலானோர் வாடகையைச் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் வாடகையை செலுத்தாமல் இழுத்தடித்து வருவதாக தெரிகிறது.இந்நிலையில் மகாராஜநகரில் வாடகை செலுத்தாமல் இருந்த கடையை
, மாநகராட்சி ஊழியர்கள் வியாழக்கிழமை பூட்டி,சீல் வைத்தனர். இதனால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல வாடகை செலுத்தாத கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.