தினமலர் 30.11.2010
வரி செலுத்த வால்பாறை நகராட்சி நிர்வாகம் “கெடு‘
வால்பாறை: வால்பாறை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை வரும் 10ம் தேதிக்குள் செலுத்த நகராட்சி நிர்வாகம் கெடு விதித்துள்ளது. வால்பாறை நகராட்சி செயல்அலுவலர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: வால்பாறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், கடைவாடகை, தொழில்வரி, உரிமைக்கட்டணம் ஆகியவற்றை வரும் 10ம் தேதிக்குள் நகராட்சி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட தேதியில் வரி செலுத்தாதவர்கள் வீடு மற்றும் கடைகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.