வைகை ஆற்றில் “ஆயில் புல்லிங்’ மாநகராட்சியின் அடுத்த “அஸ்திரம்’
மதுரை:மதுரையில், கொசு உற்பத்தியை தடுக்க முடியாமல் திணறி வரும் மாநகராட்சியின் அடுத்த அஸ்திரமாக,”ஆயில் புல்லிங்’ முறையை கையில் எடுத்துள்ளது.
“டெங்கு’ பாதிப்பிற்கு பின், கொசுக்கள் மீதான அச்சம், மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. கொசு உற்பத்திக்கு வைகையில் தேங்கும் கழிவுநீரும் ஒரு காரணம்.
இதை ஒழிக்க டாக்டர்கள் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டும், கட்டுப்படுத்த முடியவில்லை. கொசு மருந்து, புகை, ஆயில் பால் உள்ளிட்ட பல்வேறு அஸ்திரங்களை பயன்படுத்தியும், அழிக்க முடியவில்லை. இறுதியில் “ஆயில் புல்லிங்’ முறையை பயன்படுத்தி, கொசுக்களை அழிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
முன்னோட்டமாக, வைகை ஆற்றில் ஆகாயத் தாமரையை அகற்றி, ஆயில் புல்லிங் மற்றும் கொசு மருந்து தெளிக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டது. இது பலனளிக்கும்பட்சத்தில்,வார்டுகளிலும் அறிமுகப்படுத்தப்படும்.
இம்முறையால், கொசுப்புழுக்களின் சுவாசம் தடுக்கப்பட்டு, வளர்ச்சி பெறும் முன் அவை இறப்பை சந்திக்கும். அதிகாரிகளின் இந்த முயற்சி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.