தினமலர் 30.06.2011
மாநகராட்சி கமிஷனர் தகவல் எரிவாயு தகனமேடையில் “1003′ சடலங்கள் எரிப்பு
சேலம்: “”சேலம் மாநகராட்சி நவீன எரிவாயு தகனமேடையில், 1,003 சடலங்கள் எரிக்கப்பட்டுள்ளது,” என, மாநகராட்சி கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சி கமிஷனர் நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மாநகராட்சிக்க சொந்தமான காக்காயன் சுடுகாடு வளாகத்தில், இரண்டு கோடியே, 34 லட்சத்தில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 8 ம் தேதி தகனமேடை திறக்கப்பட்டது. இதை “அமைதி அறக்கட்டளை‘ என்ற தொண்டு நிறுவனம் பராமரித்து வருகிறது. இதுவரை(ஜூன் 28) வரை தகன மேடையில் 1,003 சடலங்கள் எரிக்கப்பட்டுள்ளன.
நவீன எரிவாயு தகனமேடை காலை, 7 மணி முதல் இரவு, 7 மணி வரை இயக்கப்படுகிறது. பொதுமக்கள் முன்பதிவு செய்யவும், இதர விபரங்கள் அறியவும் 241 6663 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். வளாகத்தில், இரண்டு தகன மேடை, ஒரு அஞ்சலி மண்டபம், முடி எடுக்கும் இடம், கழிப்பிட வசதி, ஆம்புலன்ஸ் வசதி மற்றும் ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. சுற்று சூழல் பதுகாப்புக்காக உலக தரசான்று பெறப்பட்டுள்ளது. சடலத்தை எரிக்க விரும்புவோர் தக்க மருத்துவ சான்றிதழை பெற்று தகன மேடை அலுவலக வளாகத்தில் கேட்கும், இதர சான்றிதழ்களை அளித்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஒரு முறை எரிவாயு தகனமேடை உபயோகத்துக்கு நன்கொடையாக, 100 ரூபாயும், எரியூட்ட பொருள் நான்கொடை, 800 ரூபாய், அமரர் ஊர்தி வாடகை, 600 ரூபாய் ஆக மொத்தம், 1, 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. எரியூட்டப்பட்ட பிறகு, தகனமேடை அலுவலகத்தில் வழங்கப்படும் 4(ஏ) சான்றிதழை பெற்று மாநகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளாலம். ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் பொது எரிவாயுதகனமேடையாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.