தினமணி 31.08.2010 “5.14
ஒசூர் நகரில்
5.14 கோடி நிதியில் சாலைகள் சீரமைக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் எஸ்.ஏ.சத்யா கூறினார்.நகர்மன்றக் கூட்டத்தில் அவர் பேசியது
:ஒசூர் நகரில்
5.14 கோடியில் போக்குவரத்துக் கழக அலுவலகச் சாலை, ராஜேஸ்வரி நகர் சாலை உள்ளிட்ட 50 சாலைகள் சீரமைக்க நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதேபோல்
, புதிய பஸ் நிலையப் பராமரிக்கும் பணியை மேற்கொள்ள 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொண்டு நிறுவனங்கள் மூலம் பராமரிக்க டெண்டர் விரைவில் விடப்படும்.மாதம்
1,65,000 பராமரிப்பு செய்து கொள்ள ஆண்டுக்கு 19,80,000 நகராட்சி நிர்வாக இயக்குநரின் அறிவுரைப்படி இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.