மாலை மலர் 09.12.2010
வரி செலுத்தாத கடைகளுக்கு “சீல்” குன்னூர் நகராட்சி அதிரடிகுன்னூர்
, டிச. 8- குன்னூர் பஸ் நிலையம் மவுண்டு ரோடு ஆகிய இடங்களில் உள்ள 10 கடைகள் நகராட்சிக்கு சுமார் ரூ. 6.05 லட்சம் வரிபாக்கி செலுத்த வேண்டியது இருந்தது. இதில் ஒரு கடை மட்டும் ரூ. 2 1/2 லட்சம் செலுத்த வேண்டிய திருந்தது.இந்த கடைகளுக்கு நகராட்சி நோட்டீசு அனுப்பி இருந்தது
. வரி பாக்கியை உடனே செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டு அதற்கு காலக்கெடுவும் நிர்ணயித்து இருந்தது.இருப்பினும் மேற்கண்ட
10 கடைகளின் உரிமையாளர்கள் வரி பாக்கியை செலுத்த வில்லை. இதனால் நேற்று நகராட்சி அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி, வரி பாக்கி செலுத்தாத 10 கடைகளுக்கு “சீல்” வைத்தனர்.மேலும் குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணியிலும் நேற்று அதிகாரிகள் ஈடுபட்டனர்
.நகராட்சிக்குட்பட்ட
30 வார்டுகளிலும் வரி பாக்கியை செலுத்தாத பொது மக்கள் உடனடியாக தங்களது வரி பாக்கியை செலுத்த வேண்டும் என்று நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சண்முகம் தெரி வித்துள்ளார்.