அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் திருவொற்றியூர் நகராட்சி

திருவொற்றியூர்
நகராட்சியில் 48 வார்டுகள் உள்ளது. நகராட்சியின் தலைவராக உள்ள ஆர்.ஜெயராமன், துணைதலைவராக உள்ள வி.ராமநாதன் ஆகியோர் கவுன்சிலர்களுடன் இணைந்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நகராட்சியில் வசிக்கும் பொதுமக்களின் நீண்ட நாள் கனவான பாதாள சாக்கடை திட்டம் ரூ. 88 கோடியில் நடைபெற்று வருகிறது. தடையில்லாமல் குடிநீர் வினியோகம் செய்வதற்காக ரூ. 88 கோடியில் குடிநீர் திட்ட பணியும் முழு வீசுசில் நடைபெறுகிறது.
ரூ. 30 லட்சம் செலவில் சிறுவர் பூங்காவுடன் கூடிய நவீன நீச்சல் குளம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ரூ. 1.04 லட்சத்தில் அமரர் ஊர்தியுடன் கூடிய நவீன எரியூட்டு தகன மேடை கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட உள்ளது.
ரூ. 20 லட்சம் செலவில் இறைச்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
சட்ட மன்ற உறுப்பினர் நிதியின் மூலம் சாலை, வகுப்பறை, அழகிய பூங்கா போன்ற பணிகள் ரூ. 90.33 லட்சத்திலும், நாடாளுமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் ரூ. 15 லட்சம் செலவில் திட்ட பணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் மூலம்ன் ரூ. 105.48 லட்சம் செலவில் மக்களின் அடிப்படை வசதிக்கான பணிகள் நடைபெற்றுள்ளன. சாலை வசதி, குடிநீர், மழைநீர் கால்வாய், பள்ளி கட்டிடம் என எண்ணற்ற பணிகளை திருவொற்றியூர் நகராட்சி செய்து வருகிறது.
ரூ. 5 கோடிக்கு மகப்பேறு நிதியும் வழங்கப்பட்டுள்ளது. தெருவிளக்கு, உயர் கோபுர விளக்கு, நகராட்சி மருத்துவமனை சீரமைப்பு, போன்ற பணிகளில் திருவொற்றியூர் நகராட்சி சிறந்து விளங்குகிறது.
நகராட்சி தலைவர் ஜெயராமன் கூறுகையில், ‘மக்களின் தேவைகளை கண்டறித்து அதை முழுமையாக செய்து முடிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் பல புதிய திட்டங்ளை உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம். மேலும் பல்வேறு திட்டங்கள் உருவாக்கவும் திட்ட மிட்டுள்ளோம்.