மாலை மலர் 24.09.2013

சென்னை, செப். 24– சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
சென்னை மாநகராட்சி, கல்வித்துறை சார்பில் சென்னை பள்ளியில் 10வது வகுப்பு
பயின்று 2013ஆம் ஆண்டு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை
பள்ளியில் 11–ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ, மாணவிகளில் மாநகராட்சி
அளவில் மதிப்பெண் தர வரிசை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தேசிய கல்வி சுற்றுலா மும்பை, ஒளரங்காபாத், அஜந்தா, எல்லோரா, பூனே
போன்ற இடங்களுக்கு 25–ந்தேதி அன்று இரவு 10.30 மணியளவில் மும்பை ரெயில்
ரெயில் மூலம் செல்ல உள்ளனர்.
இவர்கள் அக்டோபர் 2–ந்தேதி சென்னை
திரும்ப உள்ளனர். இந்த மாணவ, மாணவிகளுடன் 4 ஆசிரியர்களும், உதவி கல்வி
அலுவலர் ஒருவரும் செல்கிறார்கள்.
முதல்–அமைச்சரின் ஆணைக்கிணங்க,
சென்னை மாநகராட்சி இந்த தேசிய சுற்றுலாவிற்காக 4 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய்
செலவிடுகிறது. இந்த தேசிய சுற்றுலா செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சென்னை
மாநகராட்சி, ரிப்பன் கட்டட வளாகத்தில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை
துரைசாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்து, சுற்றுலாவிற்கு தேவையான
அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் துணை மேயர்
பென்ஜமின், நிலைக்குழு தலைவர் (கல்வி) மகிழன்பன் மற்றும் மாநகராட்சி
கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.