தினத்தந்தி 19.06.2013
அனுமதி இல்லாமல் செயல்படும் இறைச்சி கடைகள் மீது குற்றவியல் நடவடிக்கை மாநகராட்சி கமிஷனர் லதா எச்சரிக்கை
கோவை மாநகராட்சி கமிஷனர் ஜி.லதா விடுத்துள்ள அறிக்கையில் கூறி
இருப்பதாவது:– கோவை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பொது
சுகாதாரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் சுகாதாரமற்ற முறையில் மாநகராட்சி
அனுமதி பெறாமல் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி கடைகள்
இயங்கி வருகின்றன. இவைகளில் இருந்து இறைச்சி கழிவுகள் பொது இடங்களில்
கொட்டப்பட்டு வருகின்றன.

இதனால் துர்நாற்றம் மற்றும் சுகாதார கேடுகள் ஏற்படுகிறது. ஆகவே அனுமதி
இல்லாமலும், மற்றும் மாநகராட்சி உரிமம் பெறாமலும் செயல்படும் இறைச்சி
கடைகளுக்கு உரிமம் பெறுவது தொடர்பாக மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவில்
விண்ணப்பங்களை சமர்ப்பித்து, உரிமம் பெற்றுக்கொள்ளலாம். பொது இடங்களில்
சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் இறைச்சிகள் பறிமுதல்
செய்யப்படும். இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படுவதுடன் இந்த
உத்தரவை மீறி செயல்படும் இறைச்சிக்கடை உரிமையாளர்கள் மீது மாநகராட்சியால்
சட்டப்படி தகுந்த குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.