தினமணி 28.05.2013
அனுமதி பெறாத விளம்பரப் பலகைகள் அகற்றம்
தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
“குர்கான் எல்லையில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டன. அந்த விளம்பரங்களை வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 15 நாள்களில், அனுமதி பெறாமல் 50 இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன’ என்று தெற்கு தில்லி மாநகராட்சி துணை ஆணையர் (விளம்பரம்) சுஷீல் குமார் சிங் கூறினார்.