தினமணி 22.11.2013
அய்யப்பநகர் ஊர்ப்புற நூலகத்திற்கு புதிய சுற்றுச் சுவர் மேயர் உறுதி
திருச்சி சுப்பிரமணியபுரம் அய்யப்பநகர் ஊர்ப்புற
நூலகத்திற்கு புதிய சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கி தருவதாக திருச்சி
மேயர் அ.ஜெயா நவ.16ம் தேதி நடைபெற்ற நூலக வார விழாவில் உறுதி
அளித்துள்ளார்.
வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற விழாவில் அரசு தலைமை கொறடா
எம்.மனோகரன், திருச்சி மேயர் அ.ஜெயா, மாவட்ட நூலக அலுவலர் ஏ.பி.சிவகுமார்
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வாசகர் வட்ட துணைத் தலைவர் ராஜராம் பாண்டியன்
அனைவரையும் வரவேற்றார், மகளிர் அணி செயலர் பா.ஷகிலா பேகம் நன்றி கூறினார்.