தினமணி 07.08.2013
மதுரை அருள்தாஸ்புரம் அய்யனார் கோவில் தெரு
பகுதியில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள்
இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.
அருள்தாஸ்புரம் அய்யனார் கோவில் தெருவில், மாநகராட்சிக்கு சொந்தமான இடம் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
இதனால் 8 ஆவது வார்டில் இருந்து பாதாளச் சாக்கடை இணைப்புக் குழாய்கள்,
கழிவுநீரேற்று நிலையத்துடன் இணைப்பு கொடுக்க முடியாத நிலை இருந்து வந்தது.
அதையடுத்து, அப் பகுதியை ஆய்வு மேற்கொண்ட மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா, ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தினார்.
இதன்படி, ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 7 வீடுகள் இடித்து
அப்புறப்படுத்தப்பட்டன. இரு வீடுகளை இடிப்பதற்கு நீதிமன்றத்தில் தடை
உத்தரவு பெறப்பட்டிருந்ததால், அவ்வீடுகள் இடிக்கப்படவில்லை.
அப்புறப்படுத்தப்பட்டன. இரு வீடுகளை இடிப்பதற்கு நீதிமன்றத்தில் தடை
உத்தரவு பெறப்பட்டிருந்ததால், அவ்வீடுகள் இடிக்கப்படவில்லை.