தினமணி 02.11.2010
அறந்தாங்கி நகராட்சியில் உள்ளாட்சி தின விழா
அறந்தாங்கி, நவ. 1: அறந்தாங்கி நகராட்சியில் உள்ளாட்சிகள் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, புதுக்கோட்டை சாலையில் உள்ள கலவை உரக் கிடங்கில் நகராட்சி ஊழியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலம் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மாணவ – மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மக்கள் குறைகேட்பு முகாம் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டன. பள்ளி மாணவ – மாணவிகள், நகராட்சி ஊழியர்கள், சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணிக்கு அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியர் அ.மு. நாகேந்திரன் தலைமை வகித்தார். நகர் மன்றத் தலைவர் பழ. மாரியப்பன் முன்னிலை வகித்தார்.
பேரணியை சட்டப்பேரவை உறுப்பினர் உதயம் சண்முகம் கொடியசைத்து தொடக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் ப. அசோக்குமார், பொறியாளர் ஜி. தங்கபாண்டி, துணைத் தலைவர் டி.ஏ.என். கச்சு முகம்மது மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.