தினமணி 31.07.2013
தினமணி 31.07.2013
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட முத்தானந்தபுரம்
தெரு எண்:1 மற்றும் 2, சந்தைப்பேட்டை தெரு ஆகிய பகுதிகளில் உள்ள
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப் பகுதிகளில் சாலையோர கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின்
முன்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், பாதசாரிகள் மற்றும் இருசக்கர
வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதாக நகராட்சிக்கு புகார்
வந்ததாம்.
இதையடுத்து, நகராட்சி ஆணையர் வரதராஜ் உத்தரவின் பேரில், நகரமைப்பு
அலுவலர் ராஜசேகரன் தலைமையில், நகரமைப்பு ஆய்வாளர் பொன்னுச்சாமி, சுகாதார
அலுவலர் ராஜசேகர் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.