தினமலர் 26.02.2010
ஆடு, மாடுகளை வீட்டில் கட்டி வளர்க்க பேரூராட்சி அறிவுரை
ஊத்துக்கோட்டை :”ஆடு, மாடுகளை அதன் உரிமையாளர்கள் தங்களது வீடுகளில் கட்டி வளர்க்க வேண்டும்‘ என ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் 10வது வார்டு பஜார் பகுதி மற்றும் முக்கிய சாலைகளில் ஆடு, மாடுகள் தெருக்களில் திரிகின்றன. இதன் உரிமையாளர் கள் அவற்றை வீடுகளில் கட்டி வளர்க்காமல் தெருக்களில் விட்டு விடுகின்றனர்.இவைகள் சாலையோரம் உள்ள காய்கறி, பழம், பூ ஆகிய கடைகளுக்குச் செல்கின்றன. வியாபாரிகள் அவற்றை விரட்டுகின்றனர். இதனால் மாடுகள் மிரண்டு பாதசாரிகள் மீது மோதுகின்றன. சில சமயங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிரண்டு ஓடும் மாடுகளால் விபத்துக்கு ஆளாகின்றனர்.காலை, மாலை வேளைகளில் மாணவ, மாணவியர் கடும் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். இங்குள்ள பஸ் நிலையத்திலும் ஆடு, மாடுகள் ஜாலியாக உலா வருவதால், பஸ்கள் உள்ளே செல்வதற்கு கடும் சிரமம் ஏற்படுகிறது. இது குறித்து, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் பெரியசாமி உத்தரவின் பேரில், ஒலி பெருக்கி மூலம் ஆடு, மாடுகளை அதன் உரிமையாளர்கள் தங்களது வீடுகளில் கட்டி வளர்க்க வேண்டும். இல்லையெனில், அடுத்த சில தினங்களில் சாலைகளில் திரியும் ஆடு, மாடுகளை பிடித்து கோ–சாலையில் ஒப்படைக்கப்படும் என எச்சரித் துள்ளனர