தினத்தந்தி 24.10.2013
ஆம்பூர் பாலாற்றில் குப்பைகள் அகற்றும் பணி

ஆம்பூர் பாலாற்றில் குப்பைகள்
கொட்டுவதும், கழிவுகளை பாலாற்றில் கொண்டு போடுவதும் என தொடர்ந்து நடந்து
வருகிறது. இதனால் பாலாறு முழுவதும் குப்பை மேடாக காட்சி அளித்து வருகிறது.
பாலாற்றில் உள்ள குப்பைகளை அகற்றி, பாலாற்றை பாதுகாக்க வேண்டுமென பொது
மக்கள் கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து நகராட்சி சார்பில் பாலாற்றில்
உள்ள குப்பைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. அந்த பணிகளை நகரசபை தலைவர்
சங்கீதாபாலசுப்பிரமணி, ஆணையாளர் (பொறுப்பு) குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது துப்புரவு அலுவலர் பாஸ்கர், ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் உடன்
இருந்தனர்.