தினமணி 25.10.2010
ஆரணியில் நவீனக் கழிப்பறை திறப்பு
கும்மிடிப்பூண்டி,அக். 24: கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணி பேரூராட்சியில் ரூ 15 லட்சம் செலவில் நவீன கழிப்பறை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.÷கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணி பேரூராட்சியின் 4-வது வார்டு தெலுங்கு காலனியில் திடக் கழிவு மேலாண்மை கிராமப்புற மக்கள் பயன்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய நவீன கழிப்பறை கட்டப்பட்டது.
÷இதன் திறப்பு விழா, ஆரணி பேரூராட்சித் தலைவர் ஹேமபூஷணம் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், துணைத் தலைவர் பாபு முன்னிலை வகித்தனர். ÷விழாவில், ஆரணி பேரூராட்சியின் 4-வது வார்டு கவுன்சிலர் மேகலா ஜெகதீசன் வரவேற்புரை நிகழ்த்தினார். பேரூராட்சித் தலைவர் ஹேமபூஷணம் நவீன கழிப்பறையை திறந்து வைத்தார்.÷இந்த விழாவில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கரிகாலன், கலா சீனிவாசன், சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.