தினமணி 06.11.2013
ஆற்காடு நகரில் திட்டப் பணிகள்:
நகராட்சிகளின் இணை ஆணையர் ஆய்வு
ஆற்காடு நகரில் செயல்படுத்தப்படவுள்ள திட்டப்
பணிகளை நகராட்சிகளின் நிர்வாக இணை ஆணையர் அஜய் யாதவ் செவ்வாய்க்கிழமை
நேரில் ஆய்வு செய்தார்.
பையோகேஸில் மின்சாரம் தயாரிக்கும் முறை,
ஆற்காடு பஸ் நிலையத்தில் இருந்து பைபாஸ் சாலை வரை 70 அடி சாலை அமையவுள்ள
இடம், நம்ம கழிவறை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பகுதி 1-ல் 24 மணி
நேரமும் குடிநீர் விநியோகிக்க நடைபெறும் திட்டப் பணி உள்ளிட்டவற்றை அவர்
ஆய்வு செய்தார்.எம்எல்ஏ வி.கே.ஆர். சீனிவாசன், நகர்மன்றத் தலைவர்
ஆர்.புருஷோத்தமன், நகராட்சி ஆணையாளர் செ.பாரிஜாதம் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.