தினமலர் 03.02.2010
ஆலங்காயம் பேரூராட்சியில் வரிவசூல் முகாம்
வாணியம்பாடி:ஆலங்காயம் மற்றும் உதயேந்திரம் பேரூராட்சியில் தீவிர வரிவசூல் முகாம் நடந்தது.ஆலங்காயம் பேரூராட் சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவசூல் செய்வதற்காக தீவிர வரிவசூல் முகாம் நடந்தது. செயல் அலுவலர் ஆனந்தன்(பொறுப்பு) தலைமையில் நடந்த முகாமில் வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.
அதே போன்று உதயேந்திரம் பேரூராட்சியிலும் செயல் அலுவலர் ஆனந்தன் தலைமையில் வரி வசூல் முகாம் நடந்து வருகிறது. அப்பகுதியில் தண்டோரா போட்டு வரிவசூல் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்