தினமலர் 04.05.2010
ஆழ்வார்குறிச்சியில்இலவச சீருடை வழங்கல்
ஆழ்வார்குறிச்சி‘:ஆழ்வார்குறிச்சி டவுன் பஞ்.,சில் இலவச சீருடை வழங்கும் விழா நடந்தது.ஆழ்வார்குறிச்சி டவுன் பஞ்.,சில் சுகாதார பணியாளர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா நடந்தது. டவுன் பஞ்., தலைவர் பொன்ஸ் தலைமை வகித்து இலவச சீருடைகளை வழங்கினார். செயல் அலுவலர் லெனின் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் சிவராமன், கதிர்வேல், மேரி, இசக்கியம்மாள், ஜெயமேரி, விவசாயிகள் சங்க பொறுப்பாளர் பறும்பு சுப்பையா, முத்து, ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.