தினமணி 31.10.2013
இன்று மாநகராட்சி மன்றக் கூட்டம்
தினமணி 31.10.2013
இன்று மாநகராட்சி மன்றக் கூட்டம்
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
ஒவ்வொரு மாதமும் மாநகராட்சி மன்றக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில்
நடைபெற்று வருகிறது. இந்த மாதத்துக்கான மன்றக் கூட்டம் வியாழக்கிழமை
நடக்கிறது. மேயர் சைதை துரைசாமி பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த
நிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மாநகராட்சியின் இரண்டாண்டு
சாதனைகள் பட்டியலிடப்படவுள்ளன.
மேலும் சென்னையில் டெங்கு நோய் பரவி வருவதாக செய்தி வெளியாகி வருவதால்,
இந்தப் பிரச்னையை மன்றக் கூட்டத்தில் எதிர்கட்சிகள் எழுப்பும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மன்றக்கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள்
இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.