தினமணி 28.11.2013
இன்றும் நாளையும் உடுமலையில் குடிநீர் விநியோகம் இருக்காது
தினமணி 28.11.2013
இன்றும் நாளையும் உடுமலையில் குடிநீர் விநியோகம் இருக்காது
உடுமலையில் நவம்பர் 28 மற்றும் 29 (வியாழன்,
வெள்ளி) ஆகிய இரண்டு நாள்கள் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக,
நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, நகராட்சி ஆணையாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
திருமூர்த்தி அணையில் இருந்து உடுமலை நகரம் வரை குடிநீர் கொண்டு வர
அமைக் கப்பட்டுள்ள இரண்டாவது குடிநீர்த் திட்ட பிரதானக் குழாய்களில்
போடிபட்டி, அண்ணா நகர், பள்ளபாளையம் பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இவற்றைச் சரி செய்யும் வகையில் உடுமலை நகரம் முழுவதும் நவம்பர் 28
மற்றும் 29 (வியாழன், வெள்ளி) ஆகிய இரு நாள்கள் குடிநீர் விநியோகம் ரத்து
செய்யப்படுகிறது. இதனால், குடிநீரைச் சேமித்து வைத்துக் கொள்ளும்படி பொது
மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், குடிநீரை காய்ச்சிப்
பருகுமாறும் வேண்டப்படுகின்றனர்.