தினமலர் 27.08.2010
இலஞ்சி டவுன் பஞ்.,ல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தல்
திருநெல்வேலி:இலஞ்சி டவுன் பஞ்.,ல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று உதவி இயக்குனரிடம் வலியுறுத்தப்பட்டது.நெல்லை மண்டல டவுன் பஞ்.,களின் உதவி இயக்குனர் அலுவலகத்தில், இலஞ்சி டவுன் பஞ்., துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:இலஞ்சி டவுன் பஞ்.,ல் 31.3.2008 அன்று நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு தெரியாமல் கூடுதலாக 4 பொருட்கள் சேர்த்து தன்னிச்சையாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் செய்து வரும் நபர்கள் மூலம் அரசுக்கு வேண்டிய வருமானம் தடுக்கப்பட்டு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இலஞ்சி டவுன் பஞ்., தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.