தினமலர் 20.08.2010
ஈரோடு தொகுதியில் பல கோடி ரூபாய்க்கு வளர்ச்சி பணி
ஈரோடு
: “”ஈரோடு தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடக்கிறது,” என்று, ஈரோடு எம்.எல்.ஏ., ராஜா கூறினார்.நசியனூர் அருகே
300 கோடி ரூபாய் திட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க பணிகள் நடக்கின்றன. நேதாஜி ரோட்டில் 1.87 கோடியில் வணிக வளாகம், தினசரி மார்க்கெட்டில் 64 லட்சம் ரூபாயில் வணிக வளாகம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஈரோடு பஸ் ஸ்டாண்டில் கான்கிரீட் தளம் மற்றும் வடிகால் அமைத்தல் மற்றும் சின்னமுத்து வீதியில் புதை வடிகால் அமைத்தல் பணி 2.50 கோடி ரூபாயில் பணி நடக்கிறது.ஈரோடு நகராட்சியில் அங்கீகரிக்கப்பட்ட
15 குடிசை பகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள 454 பேருக்கு புது வீடுகள் கட்டுதல் மற்றும் அடிப்படை வசதி செய்வதற்கு ஐந்து கோடியே 45 லட்சம் ரூபாய் மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து மானியம் பெறப்பட்டு பணிகள் துவங்கப்படவுள்ளது. சூரியம்பாளையத்தில் 500 குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டப்படவுள்ளன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வெண்டிபாளையம் உரக்கிடங்கில் 59 லட்சம் ரூபாயில் நடக்கின்றன. வெண்டிபாளையம் அருகே காவிரியாற்றின் குறுக்கே கதவணை பணிகள் நடந்து வருகிறது. ரிங் ரோடு அமைக்கும் பணிக்கு 22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஈரோடு மணிக்கூண்டு அருகே
1.87 கோடி ரூபாயில் வணிக வளாகம் கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மேட்டூர் ரோட்டில் 19 லட்சம் ரூபாயில் இரும்பு பாலம் கட்டப்படவுள்ளது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பணி 25 கோடி ரூபாயில் நடக்கிறது. காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவு கலக்காமல் தடுக்க ஏழு கோடி ரூபாய் செலவில் தடுப்பு சுவர் கட்டப்படுகிறது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே 12 கோடி ரூபாயில் மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. தொட்டம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தில் பத்து கிராம பஞ்சாயத்துகள் பயன்படும் வகையில் எட்டு கோடி ரூபாய் செலவில் பணிகள் முடிவுற்றுள்ளது.ஈரோடு எம்
.எல்.ஏ., ராஜா மேலும் கூறியதாவது:ஈரோடு தொகுதியில் 2006 முதல் 2009 வரை 258 பணிகள் 12 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் செய்து முடிக்கப்பட்டுள்ளன. 191 பணிகள் 23 கோடியே 11 லட்சம் செலவில் நடந்து வருகிறது. காவிரி சாலை நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதிய பள்ளி கட்டிடம் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளியில் 48 லட்சம் ரூபாயில் கூடுதல் வகுப்பறை கட்டப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மாமன்றக்கூடம் மற்றும் கூடுதல் அலுவலக கட்டிடம் ஐந்து கோடி ரூபாயில் நடக்கிறது.காசிபாளையம் நகராட்சியில்
468 பணிகள் எட்டு கோடியே 66 லட்சம் ரூபாய், வீரப்பன்சத்திரம் நகராட்சியில் 308 பணிகள் 17 கோடி ரூபாய், பெரியசேமூர் நகராட்சியில் 106 பணிகள் இரண்டு கோடியே 52 லட்சம் ரூபாய், சூரம்பட்டியில்127 பணிகள் மூன்று கோடியே 61 லட்சம் ரூபாய், சூரியம்பாளையம் டவுன் பஞ்சாயத்தில் பகுதியில் 107 பணி இரண்டு கோடியே 88 லட்சம் ரூபாய், சித்தோடு டவுன் பஞ்சாயத்து பகுதியில் 40 பணி 77 லட்சம் ரூபாய், பெரிய அக்ரஹாரத்தில் 63 பணி ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய், ஈரோடு யூனியனில் 1,000 பணிகள் 10 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.