தினத்தந்தி 19.12.2013
ஈரோடு மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
ஈரோடு
மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு
கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு கூட்டமைப்பின் கவுரவ தலைவர்
கே.ஆறுமுகம் தலைமை தாங்கினார். தலைவர் விஜயக்குமார், செயலாளர்
ராதாகிருஷ்ணன், பொறியாளர் சங்க தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர்
அசோக்குமார், துணைத்தலைவர் சண்முகவடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளன கோட்ட செயலாளர் கே.சாமிநாதன்,
தென்னக ரெயில்வே மஸ்தூர் சங்கத்தின் கோட்ட துணை செயலாளர் பாஸ்கர் உள்பட
பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில்
மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு உதவி
செயற்பொறியாளர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் பொறியாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பிரேம்குமார், துப்புரவு
ஆய்வாளர் சங்க தலைவர் ஜாஹீர் எஸ்.ஹூசைன் உள்பட சங்க நிர்வாகிகள் பலர்
கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சுப்பணியாளர் சங்க துணைத்தலைவர்
பி.வி.ஆறுமுகம் வரவேற்று பேசினார். முடிவில் துணைத்தலைவர் ப.மாரிமுத்து
நன்றி கூறினார்.