தினத்தந்தி 21.06.2013
ஈரோடு மாநகராட்சியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்க வேண்டும் மேயர் மல்லிகா பரமசிவம் வேண்டுகோள்
தமிழகம் முழுவதும் கடந்த 2003–ம் ஆண்டு தமிழக முதல்–அமைச்சர்
உத்தரவின்படி மழைநீர் சேகரிப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால்
நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக ஏதுவாக இருந்தது. தற்போது தமிழகம் முழுவதும்
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை குடியிருப்புகள், வணிக வளாகங்கள்,
தொழிற்சாலைகளில் நிலத்தடி நீரை உயர்த்த முதல்–அமைச்சர் அறிவுறுத்தி
உள்ளார். அதன்படி ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து குடியிருப்புகள்,
தொழிற்சாலைகள், வணிக வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்க
கேட்டுக்கொள்கிறேன். பருவமழைக்கு முன்பாக இந்த கட்டமைப்புகளை அமைக்க
வேண்டும்.
இதுபோல் குளம், குட்டைகள் நீர் பிடிப்பு பகுதிகளை சுத்தம் செய்து
மழைநீர் சேகரிப்பு செய்ய மாநகராட்சிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு
உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.