தினமலர் 20.11.2013
உலக கழிப்பறை தினமான நேற்று மாநகராட்சி பராமரிக்கும் கழிப்பறைகளின் சுத்தம் குறித்து ஆய்வு
மதுரை : உலக கழிப்பறை தினமான நேற்று, மாநகராட்சி பராமரிக்கும் கழிப்பறைகளின் சுத்தம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மேயர் ராஜன்செல்லப்பா தலைமையிலான அதிகாரிகள்.
உலக கழிப்பறை தினம்’ நேற்று; “இதுக்குமா தினம்?’ என, கேட்கக்கூடாது. மனிதனின் சுகாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பவை, கழிப்பறை. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 524 கழிப்பறைகளின் சுகாதாரம் குறித்து, மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில், துணை கமிஷனர் லீலா, துணைமேயர் கோபாலகிருஷ்ணன், உதவி கமிஷனர் தேவதாஸ், நகர்நல அலுவலர் டாக்டர் யசோதா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அலங்கோலமாய் காட்சியளிக்கும் பல கழிப்பறைகள், மேயரின் வருகைக்காக நேற்று சுத்தம் செய்யப்பட்டிருந்தன.
கழிப்பறையின் வெளியே சுகாதாரக் கேடாக காட்சியளித்த பகுதிகளை, பொடிகளை தூவி “அழகாக்கினர்’. பொது இடங்களில் சிறுநீர் கழித்தவர்களுக்கு ரூ.2,850 அபராதமும் விதித்தனர்! உலக கழிப்பறை தினம் என்பதால், “ஒரு நாள்’ நடவடிக்கையாக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.