மாலை மலர் 22.10.2010
உலக மேயர்கள் மாநாடு
: மேயர் மா.சுப்பிரமணியன் நாளை தென்கொரியா பயணம்
சென்னை
, அக். 22- தென்கொரியா நாட்டில் உள் இன்கியான் நகரில் உலக மேயர்கள் மாநாடு 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இதில் உலகில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பது, அதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.இந்த கூட்டத்தில் இந் தியா சார்பில் சென்னை மேயர் மா
.சுப்பிரமணியன் கலந்து கொள்கிறார். இதற்காக நாளை அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கிறார். இந்தியாவிலேயே சிறந்த மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.தட்ப வெப்பநிலை மாறுதல் குறித்து மாநகராட்சியுடன் இணைந்து சென்னைப் பல்கலைக்கழகம் ஆய்வு செய்துள்ளது
. இதன் அடிப்படையில் மேயர் அங்கு உரையாற்றுகிறார்.