தினகரன் 23.09.2010
எரியோடு பேரூராட்சி கூட்டம்
வேடசந்தூர், செப் 23:எரியோடு பேரூராட்சி கூட்டம் தலைவர் மஞ்சுளா ஜீவா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கிருஷ் ணன், செயல் அலுவலர் விஜயநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துப்புரவு மேற்பார்வையாளர் ராமமூர்த்தி வரவேற்றார். கவுன்சிலர்கள் ஜீவா, உமாச்சந்திரன், சரவணப்பெருமாள் உள்ளிட்டோர் பேசினர். மயான மேம்பாடு திட்டத்தின் கீழ் மீனாட்சிபுரம், ச.புதூர், பண்ணைப்பட்டி, மத்தனம்பட்டி, மணிக¢காரன்பட்டி, பாண்டியன்நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மயானங் களை ரூ.33 லட்சம் செலவில் மேம்பாட்டு பணிகள் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.