தினமலர் 21.05.2010
எரிவாயு தகனமேடை திறக்க ஆலோசனை
தேனி:தேனியில் அமைக்கப் பட்டுள்ள எரிவாயு தகன மேடை விரைவில் திறக்கப் பட உள்ளதாக ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நவீன எரிவாயு தகன மேடையை பராமரிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. நகராட்சி தலைவர் பழனிச்சாமி தலைமை வகித் தார். ரோட்டரி சங்கம், அல்லிநகரம் கிராம கமிட்டி, தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
தகன மேடை திறப்பதற்கு முன் பராமரிப்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதால் இக்கூட்டம் நடத்தப்பட்டது. அல்லிநகரம் விவேகானந்தா ஆண்கள் சமூக சேவகர் சங்கம் பராமரிப்பதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளது. நகராட்சி பொறியாளர் கணேசன் கூறுகையில், தகனமேடை பணிகள் முடிவடைந்து திறக்கப்படும் நிலையில் உள்ளது. தகன மேடை மெஷின் வர வேண்டியது மட்டுமே பாக்கி உள்ளது.விரைவில் வநதவுடன் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.