தினமணி 22.08.2013
அவிநாசி பேரூராட்சி பழைய பேருந்து நிலையத்தின்
பின்புறம் அமைக்கப்படும் நவீன எரிவாயு மயானப் பணிகளை, மாவட்ட ஆட்சியர்
கு.கோவிந்தராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அரசு சமன்பாட்டு
நிதி ரூ.53 லட்சம், பொதுமக்கள் பங்களிப்பு ரூ.27 லட்சம் என மொத்தம் ரூ.80
லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு மயானம் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்பில்
தியான மைய கட்டுமானப் பணிகள் 6 மாதங்களாக நடைபெற்று வருகின்றன.
இதைப்
பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், மணல் மற்றும் செங்கல் உள்ளிட்ட கட்டுமானப்
பொருள்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், நகர்ப்புற சாலை
மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு அவிநாசி
வ.உ.சி. காலனிப் பகுதியில் சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்
பணிகளை விரைந்து முடிக்குமாறு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
பேரூராட்சித்
தலைவர் ஜெகதாம்பாள் ராஜசேகர், செயல் அலுவலர் கணேசன், துணைத் தலைவர்
எம்.எஸ்.மூர்த்தி, செயற் பொறியாளர்கள் உடன் சென்றனர்.