மாலைமலர் 15.04.2010
ஏரி– குளங்களில் தூர்வாரும் பணி
துறையூர், ஏப்.15-
துறையூரில் நகராட்சி பகுதியில் காசிகுளம் மற்றும் பெரிய ஏரியில் நடுக்கிணறு ஆகிய நீர் ஆதாரங்கள் மூலம் பொதுமக்களுக்கு பயன்படும் விதத்தில் குடிநீர் அல்லாத பயன்பாட்டிற்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது கோடை காலமாக இருப்பதால் இந்த இருநீர் ஆதாரங்களும் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.
இதை தொடர்ந்து நகர்மன்ற தலைவர் பூபதி செல்லதுரை, நகர்மன்ற துணைத் தலைவர் மகாராஜன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் வைத்த கோரிக்கையின்படி துறையூர் நகராட்சி மூலம் ஏரி– குளம்– கிணறு நீர் ஆதாரங்களை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பணிகளை நகர்மன்ற தலைவர் பூபதி செல்லதுரை, நகர்மன்ற துணைத் தலைவர் மகாராஜன், ஆணையர்(பொ) ரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.