தினகரன் 14.09.2010
ஏரிகள் நிரம்பி வழிந்து வீணாக கடலில் கலக்கும் உபரி தண்ணீரை சேமிக்க மும்பை மாநகராட்சி திட்டம்
மும்பை, செப்.14: மும்பை ஏரிகளில் நிரம்பி வழிந்து தினசரி கடலில் கலக்கும் லட்சக்கணக்கான லிட்டர் கூடுதல் மழைநீரை சேமித்து வைப்பது குறித்து மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. கூடுதல் தண்ணீரை எப்படி சேமிப்பது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும்படி அதிகாரிகளை மாநகராட்சி கமி ஷனர் சுவாதீன் ஷத்திரியா கேட்டுக்கொண்டுள்ளார்.
ஷத்திரியா இது குறித்து கூறுகையில், “நகரில் உள்ள மூன்று ஏரிகளில் இருந்து ஏராளமான தண்ணீர் வெளியேறி வீணாக கடலில் கலக்கிறது. இதை சேமிப்பது அவசியம்Ó என்றார்.
துள்சி மற்றும் பவாய் ஆகிய இரண்டு ஏரிகளும் 100 சதவீதம் நிரம்பி விட்டன. தற்போது அவை நிரம்பி வழிந்து கொண்டி ருக்கின்றன. துள்சி ஏரியில் இருந்து மும்பை நகருக்கு தினசரி 18 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை ஆகிறது. மற்றொரு ஏரியான விஹார், கிழக்கு புற நகரில் உள்ள குர்லா, கலீனா மற்றும் பவாயின் ஒரு சில பகுதிகளுக்கு தினசரி 110 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்கிறது. இது தவிர தொழிற்சாலைகளுக்கும் தண் ணீர் சப்ளை செய்கிறது.
பவாய் ஏரியின் தண்ணீர் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் உபரி நீரை சேமித்தால் அதை குடிநீருக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஏரிகளில் உபரி நீரை சேமித்து வைப்பது கஷ்டமான காரியம்தான் என்ற போதிலும் அது சாத்திய மானது தான் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.
எனினும் பவாய் ஏரியை சுற்றிலும் குடியிருப்பு கட்டி டங்கள் அதிகம் உள்ளதால் இந்த ஏரியில் உபரி நீரை சேமித்து வைப்பது கடினம் ஆகும். அப்படி செய்தால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது. அதே சமயத்தில் விகார் மற்றும் துள்சி ஏரிகளின் உயரத்தை 4 முதல் 5 அடி வரை அதிக ரித்து தண்ணீரை தேக்கி வைக்கலாம் என குடிநீர் சப்ளை நிபுணர் ஆனந்த் தேவ் தார் கருத்து தெரிவித்துள்ளார்.