தினமணி 30.06.2010
ஒசூர் நகர்மன்றக் கூட்டம்: இன்று நடக்கிறது
ஒசூர், ஜூன் 29: ஒசூர் நகர்மன்றக் கூட்டம், நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடை பெறுகிறது. கூட்டத்தில் புதிய நவீன பஸ் நிலையத்துக்கான பெயர் தீர்மானித்தல், அங்கு சுங்கக் கட்டணம் வசூல், கட்டண கழிவறைகளில் கட்டண வசூல், இரு சக்கர வாகன நிறுத்ததில் கட்டணம் வசூல் செய்து கொள்ளும் உரிமைகளுக்கு முன் வைப்பு தொகை, ஏலம் தொகை உள்ளிட்டவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.