மாலை மலர் 26.07.2010
கடையநல்லூர் பகுதியில் சுற்றி திரிந்த பன்றிகள் காட்டிற்கு விரட்டியடிப்பு
கடையநல்லூர், ஜூலை.26- தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக சுகாதாரத்துறை தமிழகத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறைகள் உஷார் நிலையில் இருக்கவும் பன்றிக்காய்ச்சல் குறித்து எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் உத்தரவிட்டது.
அதன்பேரில் கடைய நல்லூர் நகரசபை ஆணை யாளர் அப்துல்லத்தீப் அறிவுரைக்கிணங்க நகர சுகாதார அலுவலர் கணேசமூர்த்தி தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் கைலாசம், பிச்சைபாஸ்கர் மற்றும் துப்புரவு தொழி லாளர்கள், நகரில் அனுமதி யின்றி திரிந்த 80-க்கும் மேற்பட்ட பன்றிகளை பிடித்து கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதிக் காட்டில் கொண்டு போய்விட்டனர்.
மேலும் பன்றி வளர்ப்போருக்கும் உடன் பன்றியை பிடித்து அப்புறப் படுத்தவும் நகராட்சி மூலம் எச்சரிக்கை நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.