தினமணி 27.08.2009
கட்டணம் செலுத்தாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
சங்ககிரி, ஆக. 26: சங்ககிரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முறையான குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்புகளை பேரூராட்சி அலுவலர்கள் புதன்கிழமை துண்டித்தனர்.
சங்ககிரி பேரூராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு பேரூராட்சி சார்பில் விரைவில் செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தைப்பேட்டை, பழைய எடப்பாடி ரோடு, வாணியர் காலனி, கிராமச்சாவடி தெரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து குடிநீர் கட்டணம் செலுத்தாத 7 வீடுகளில் பேரூராட்சி அலுவலர்கள் குடிநீர் இணைப்பைத் துண்டித்தனர்.